விமானத்தில் பறந்து சென்று சிறுமியை மோசமாக ஏமாற்றிய இந்தியருக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் கல்போர்னியா மகாணத்தை சேர்ந்த தீபக் தேஷ்பாண்டே என்பவர் விமானத்தில் பறந்து சென்று ஆர்லண்டோவை சேர்ந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தீபக் என்பவர் இணையதளம் வழியாக சிறுமியை தொடர்புகொண்டு தான் ஒரு மொடலிங் ஏஜெண்ட் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதனை அந்த சிறுமியை நம்பியதையடுத்து உனது நிர்வாண படங்களை அனுப்பை வை என கூறியுள்ளார். சிறுமியும் தனது புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்லண்டோவுக்கு சென்ற தேஷ்பாண்டே, அங்கு அந்த சிறுமியை ஹொட்டலுக்கு அழைத்து ஆபாச புகைப்படங்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்த தகவல் அமெரிக்க மத்திய புலனாய்வு படைக்கு (எப்.பி.ஐ) தெரியவந்ததையடுத்து, அவர்கள் ரகசியமாக தீபக்கை நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர், அதிகாரி ஒருவர் தன்னை சிறுமி என அறிமுகப்படுத்தி இணையதளம் வழியாக தீபக்குடன் பேசியுள்ளார். அதன் மூலம் தீபக்கின் உண்மைகள் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தீபக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தன. அப்போது தேஷ்பாண்டே தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இந்த தண்டனைக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், நிர்வாண படங்கள் எடுத்த குற்றத்துக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் மாவட்ட நீதிபதி கார்லோஸ் மென்டோஜா தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்