மகனை கொன்றுவிட்டு சிறை சென்ற தாய்: ஆவியாக வந்து ஆறுதல் சொல்லும் மகன்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மகனை பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக சிறையில் இருக்கும் ஒரு பெண், தனது மகன் ஆவியாக வந்து தனக்கு ஆறுதல் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

புளோரிடாவைச் சேர்ந்த Victoria Toth(26)ம் அவரது காதலரான Jonathan Pursglove(26)ம் குழந்தை Jayce Martinஐக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் Jonathan விடுவிக்கப்பட்ட நிலையில், Victoria தொடர்ந்து சிறையிலிருக்கிறார்.

தன்னை தினமும் தனது மகன் ஆவியாக வந்து சந்திப்பதாக தெரிவிக்கும் Victoria, இது விதி, இப்படியெல்லாம் நமக்கு நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது என்று கூறி தனது மகன் தன்னை ஆறுதல் படுத்துவதாக கூறியுள்ளார்.

Jayce அப்படி கூறுவதைக் கேட்கும்போதுதான் தொடர்ந்து வாழ்வதற்கான எண்ணமே வருகிறது என்கிறார் Victoria.

தனது வீட்டின் படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்த இரண்டு வயது Jayceஐ பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு சரியக உணவளிக்கப்படவில்லையென்றும் அவன் உடலில் கீறல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அவன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவனை ஒரு மருத்துவரிடம் சரியான நேரத்திற்கு அழைத்துச் சென்றிருந்தால் அவனைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers