22 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மாளிகையின் படுக்கையறையில் மனைவியுடன் இறந்து கிடந்த கோடீஸ்வரர்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் புகழ்பெற்ற தொழிலதிபர் Irwin Jacobs தனது மனைவியுடன் மர்மான முறையில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலதிபர் Irwin Jacobs மற்றும் அவரது மனைவி Alexandra ஆகிய இருவரும் Minnesota நகரில் 22 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மாளிகையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தம்பதியினர் தங்களது வீட்டின் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். இவர்களது அருகில் ஒரு கைத்துப்பாக்கியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இருவருக்கும் வயதாகிவிட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் தனது மனைவியின் நிலை குறித்து மூன்று நாட்களுக்கு முன்னர் தனது நண்பரிடம் பகிர்ந்துள்ளார் Irwin.

தொழிலதிபரின் இறப்பு எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள என அறிக்கை வெளியிட்டுள்ளது Irwin இன் தொழில் நிறுவனம்.

சிறப்பு ஒலிம்பிக் இயக்கத்தில் Irwin ஒரு வரலாற்று உருவமாக இருந்தார், 1991 ஆம் ஆண்டில் மினசோட்டாவில் அவர் சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுத் தலைவராக பணியாற்றினார்.

Irwin 1970 கள் மற்றும் 80 களில் தோல்வி அடைந்த நிறுவனங்களை லாபத்திற்காக வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புகழ்பெற்ற காரணத்தால் Irv the Liquidator என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...