நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்களுக்குமுன் கால்களை உடைத்துக் கொண்ட விளையாட்டு வீராங்கனை: கோர வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்களுக்குமுன் தனது இரண்டு கால்களையும் உடைத்துக் கொண்ட கோர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Auburn பல்கலைக்கழக ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான Samantha Cerio, சிக்கலான ஒரு போட்டியின்போது தரையில் குதித்து நிற்க முயலும்போது, அவரது இரண்டு கால்களும் முறிந்தன.

வெளியாகியுள்ள வீடியோவில் அவர் பல்டி அடித்து பின் லாண்டிங் செய்ய முயலும்போது, அவரது இரண்டு கால்களும் முறிவதையும், வலி தாங்காமல் அவர் கத்திக் கதறிக் கண்ணீர் விடுவதையும் காணலாம்.

வீடியோவை காண

பார்வையாளர்கள் அரங்கமே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைய, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் Samanthaவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் சென்றனர். அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் செல்லப்படும்போது அரங்கமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி அனுப்பியது.

Samanthaவின் இரண்டு கால்களும் முறிந்துள்ளதோடு, அவரது இரண்டு மூட்டுகளும் விலகியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்