அதிகாரபூர்வமாக மனைவியை விவாகரத்து செய்த உலக கோடீஸ்வரர்: இப்போதைக்கு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Vijay Amburore in அமெரிக்கா

உலகின் பணக்கார நபர் என அறியப்பட்ட அமேசான் நிறுவனர் தன்னுடைய மனைவியை அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார்.

உலகின் பணக்கார நபரும், அமேசன் நிறுவனருமான ஜெஃப் பெஸோஸ் அதிகாரப்பூர்வமாக, தன்னுடைய 25 ஆண்டுகால மனைவி மெக்கென்சி பெஸோஸ்-ஐ விவாகரத்து செய்துவிட்டார்.

அமேசான் நிறுவனத்தை துவக்குவதில் மெக்கென்சியும் தன்னுடைய முன்னாள் கணவருக்கு உதவிகரமாக இருந்தார். இவர்கள் இருவரும் 1994-ம் ஆண்டு அமேசான் நிறுவப்படுவதற்கு முன்பாக திருமணம் செய்துகொண்டனர்.

ஜனவரி மாத ஆரம்பத்தில் ஜெஃப் பெஸோஸ், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் லாரன் சான்சஸ் என்பவருடன் ஆபாசமாக பேசியிருப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவரை விவாகரத்து செய்ய மெக்கென்சி முடிவு செய்தார்.

ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது முன்கூட்டியே உடன்பாடு செய்திருந்தார்களா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய பங்குகளை பிரித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டதாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிவிப்பதற்காகவே புதிதாக ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கிய மெக்கென்சி பெஸோஸ், ஒருவருக்கொருவர் ஆதரவுடன் ஜெஃப் உடன் என் திருமணத்தை கரைக்கும் பணியை முடித்துவிட்டோம். வாஷிங்டன் போஸ்ட் , ப்ளூ ஆரிஜின் மற்றும் எங்களது அமேசான் பங்குகளில் 75% மற்றும் என் பங்குகளின் வாக்குப்பதிவு கட்டுப்பாடு ஆகிய அனைத்தையும் அவருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் சொந்த திட்டங்களை பற்றி உற்சாகமாக அடுத்த வருகையை எதிர்நோக்குகிறேன். என கடந்த காலத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்துள்ள ஜெஃப் பெஸோஸ், உற்சாகமும் அன்பும் நிறைந்த என் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் மெக்கென்சியின் ஆதரவிற்காகவும் இந்த கருத்தில் அவரது கருணைக்காகவும் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். மேலும் நண்பர்கள் மற்றும் சக-பெற்றோர்களாக எங்கள் புதிய உறவை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் எல்லா வேலைகளுடனும் சேர்ந்து, மெக்கென்சியின் திறமைகள் முழுமையாக காட்சிக்கு வந்துள்ளன. அவர் ஒரு அசாதாரண பங்குதாரர், நண்பர் மற்றும் தாய். அவள் திறமையும், புத்திசாலித்தனமும், அன்பும் நிறைந்தவள். எங்கள் எதிர்காலத்தை அவிழ்க்கும்போது, ​​நான் அவளிடம் இருந்து கற்றுக்கொள்வேன் என்று எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தின் மூலம் அவர்களது கூட்டு $ 144 பில்லியன் அமேசான் பங்குகளில், 75 சதவிகிதம் பங்குகளை ஜெஃப் (55) வைத்திருப்பார். இதிலிருந்து மெக்கென்சிக்கு 35.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு சதவிகித பங்குகள் மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஜெஃப்பின் 12 சதவீத பங்கு இப்போது 107.5 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக உள்ளது. இது உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

அவரது முன்னாள் மனைவியின் மீதமுள்ள பங்குகளையும் அவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார். 2013 ல் $ 250 மில்லியனுக்கு வாங்கிய வாஷிங்டன் பத்திரிகை மற்றும் தற்போது முதலீடு செய்யும் அவரது விண்வெளி பயண நிறுவனமான ப்ளூ ஆரிஜின் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வர உள்ளது.

இப்போது மெக்கென்சி உலகில் 24 வது பணக்கார நபர் மற்றும் 3 வது பணக்கார பெண் ஆவார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers