மைக்கேல் ஜாக்சனின் மகள் எடுத்த விபரீத முடிவு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leaving Neverland என்ற ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படத்தில் சிறு வயது குழந்தைகளை மைக்கேல் ஜாக்சன் தவறாக பயன்படுத்தியாக கூறப்பட்டிருந்தது.

இந்த ஆவணப்படத்திற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் மைக்கேல் ஜாக்சனின் மகன் பாரிஸ் ஜாக்சன், இந்த ஆவணப்படத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது பொய்யான தகவல் என பாரிஸ் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்