திருமண ஆடையுடன் வருங்கால கணவரின் கல்லறையில் அழுதுபுலம்பிய இளம்பெண்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு காதலன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அவருடைய கல்லறையின் முன், மணப்பெண் கோலத்தில் இளம்பெண் அழுதுபுலம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த சாரா பெலூச் (22) என்கிற பெண்ணும் 24 வயதான முகமது ஷெரிஃபி என்கிற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த பெற்றோர் மார்ச் 10ம் திகதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இதற்கிடையில் கடந்த மாதம் 19-ம் திகதியன்று, டி மார்கஸ் (20) என்கிற நபரால் முகமது சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், டி மார்கஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதல் ஆளாக மருத்துவமனைக்கு விரைந்த சாரா, தன்னுடைய காதலன் அறையை கேட்டு அழுதிருக்கிறார். ஆனால் அங்கு வரவேற்பறையில் இருந்த பெண், முகமது என்கிற பெயரில் எந்த தரவும் கணினியில் பதிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

இதனால் பெரும் குழப்பத்துடன் சாரா, அங்கேயே இடிந்து போய் அமர்ந்திருந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அதே பெண், சாராவின் கையை பிடித்துக்கொண்டு, மன்னித்துவிடுங்கள், முகமது ஏற்கனவே இறந்துவிட்டார் எனக்கூறி அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

உடனே கண்களில் தாரை தாரையாக வழிந்த கண்ணீருடன் அறைக்கு சென்ற சாரா, முகமதை கட்டியணைத்து கதறியுள்ளார்.

என்னை மன்னித்துவிடு, நான் உன்னை பாதுகாக்க தவறி விட்டேன். நீ என்னை ஒவ்வொருநாளும் பத்திரமாகவே பார்த்துக்கொண்டாய் என புலம்பியுள்ளார்.

அவர்களுக்கு திருமணம் நிச்சைக்கப்பட்டிருந்த நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டி, சாரா தன்னுடைய குடும்பத்தாருடன் முகமது கல்லறைக்கு சென்றுசென்றுள்ளார். அங்கு இஸ்லாமிய முறைப்படியான சடங்குகள் நடைபெற்றது. அப்போது கல்லறையின் அருகே அமர்ந்திருந்த சாராவின் திருமண ஆடையை அவருடைய தாய் தலையிலிருந்து கருமை நிறத்திற்கு மாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் சாரா, எனக்கும் முகமதுவிற்கும் இடையில் இருக்கும் காதல் பற்றி அனைவருமே வியந்து பேசுவார்கள். பிப்ரவரி 27ம் திகதி என்னுடைய பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தோம்.

அதற்காக ஏராளமான பரிசுப்பொருட்களை முகமது ஏற்கனவே வாங்கியிருந்தார். எனக்கு கொடுப்பதற்கு ஆவலாக காத்திருந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்தினம் இரவு கூட அவரை சந்தித்துவிட்டு தான் நான் வீட்டிற்கு வந்தேன். மருத்துவமனையில் கூறியதும் அது ஒரு கனவாக இருக்க கூடாது என்று தான் நினைத்தேன்.

அதன் பிறகு இரவு தினமும் முகமது என்னுடைய கனவில் வருவார். என்னிடம் பேச மாட்டார். ஆனால் என்னை அணைத்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers