காஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
107Shares

சுற்றுலா பயணிகள் காஷ்மீர் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலை அடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீற்றர் தூரம் வரையும், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது.

இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தன. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றம் நிலவியது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் ஓரளவு தணிந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்