பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி..ஒளிந்து விளையாடிய குழந்தை செய்த செயல்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா
176Shares

அமெரிக்காவில் ஒளிந்து விளையாடும் விளையாட்டின் போது, 5 வயது சிறுவன் ஏர் டைட் கூலர் உள்ளே ஒளிந்திருந்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Pompano Beach பகுதியைச் சேர்ந்தவர் Rob Wanes. இவருக்கு 5 வயதில் Nicholas என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் Rob Wanes தன் குடும்பத்தினருடன் ஒளிந்து விளையாடும்(hide-and-seek) விளையாடியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

அப்போது Nicholas மட்டும் எங்கு ஒளிந்திருக்கான் என்பதே தெரியவில்லை. இதனால் பெற்றோர் வெளியில் சென்று தேடியுள்ளனர். எங்கும் கிடைக்கவில்லை.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே வந்து தேடும் போது, அங்கிருந்த ஏர் டைட் கூலர், அதாவது கலர் பாட்டில்கள் போன்றாவை வைப்பதற்கு பயன்படுத்தப்படும் குளிர் பெட்டி, அதனுள் ஒளிந்திருந்துள்ளார்.

அதன் பின் Rob Wanes மகனை தூக்கி கட்டியணைத்துள்ளார். இந்த காட்சி அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் பெற்றோர் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இது போன்ற கூலரோ அல்லது வேறு ஏதேனும் இருந்தால், அதை குழந்தைகள் திறக்காத அளவிற்கு மூடி சாவி போட்டு மூடி வைத்துவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்