இதுவரை எங்களை முட்டாள்கள் என்று எண்ணிய நாடுகள் இனிமேல் மரியாதை கொடுக்கும்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

வரி விதிப்பு விவகாரத்தில் இதுவரை தங்களை மதிக்காததுடன், முட்டாள்கள் என்றும் எண்ணிய நாடுகள் இனி மேல் மீண்டும் மரியாதை கொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், அமெரிக்க பழமைவாதச் சங்கம் நடத்திய மாநாட்டில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார். அதில் பல்வேறு நாடுகள் உடனான அமெரிக்காவின் நல்லுறவு குறித்தும், வரி விதிப்புகள் குறித்தும் அவர் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 சதவித வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை.

இந்தியா வரி விதிப்பது போலவே பதிலுக்கு அமெரிக்காவும் வரி விதிக்க உள்ளது. ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்திற்கான வரியை, 100 சதவிதத்தில் இருந்து 50 சதவிதமாக இந்தியா குறைத்திருப்பது போதுமானதல்ல.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பன் மடங்கு பெருகி வருகிறது. இதுவரை எங்களை மதிக்காததுடன், முட்டாள்கள் எண்ணிய நாடுகள் இனி மேல் மீண்டும் மரியாதை கொடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்