நான் ஏமாற்றுவதை கணவர் கண்டுப்பிடித்தால் இது தான் நடக்கும்...காதலனிடம் கூறிய மனைவி: நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் வேறு நபருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோட் முலிஸ் (42) என்பவர் தனது மனைவி எமி (39) உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 10ஆம் திகதி எமி தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்ற முலிஸ் தனது மனைவி வீட்டில் இறந்துகிடக்கிறார் என்றும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பின்னர் எமி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது எமி உடலில் அதிகளவில் காயங்கள் இருந்ததும், இரும்பு கம்பியால் அவர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக முலிஸிடம் பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய நிலையில் மனைவியை அவர் கொன்றது தெரியவந்தது.

எமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த நிலையில் ஏற்பட்ட ஆத்திரத்தில் முலிஸ் அவரை கொன்றது தெரியவந்தது.

மேலும் எமி இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தனது ரகசிய காதலனிடம், நான் முலிஸை ஏமாற்றுவதை அவர் கண்டுப்பிடித்தால் எனக்கு அவரால் எதுவேண்டுமானாலும் நேரலாம்.

நான் உயிரிழந்தால் அதற்கு முலிஸ் தான் காரணமாக இருக்கும் என கூறியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் முலிஸை கைது செய்தனர்.

மேலும், மனைவியின் துரோகத்தை கண்டுப்பிடித்த முலிஸ், நம்மை ஏமாற்றும் மனைவிக்கு என்ன நடக்கும் என இணையத்தில் தேடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட முலிஸ் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்