வாஷிங் மெஷினுக்குள் கிடந்த பாம்பு! அலறியடித்து ஓடிய பெண்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

புளோரிடாவில் வாஷிங் மெஷினுக்குள் இருந்த துணிகளை வெளியே எடுப்பதற்காக முயன்ற ஒரு பெண் அதற்குள் கிடந்த ஒரு பாம்பைக் கண்டு ஓட்டம் பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Amanda Wise தனது வாஷின் மெஷினில் இருந்த துணிகளை எடுக்க முயலும்போது அதற்குள் ஒரு பாம்பு கிடந்ததைக் கண்டு கத்திக் கொண்டே அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பயத்தில் கிட்டத்தட்ட தான் செத்து விட்டதாக தெரிவிக்கிறார் Amanda.

ஏற்கனவே தனக்கு பாம்பு என்றால் பயம் என்று கூறும் Amanda, பயந்து அலறி தனது கணவரை அழைக்க, அவர் வந்து துடைப்பம் ஒன்றின் உதவியுடன் அந்த பாம்பை துரத்தியிருக்கிறார்.

அந்த பாம்பு, தோட்டத்திலிருந்து காற்று வருவதற்காக சுவரில் அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக வீட்டிற்குள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்