முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்? வெளியான தகவல்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி நிலைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அதை முறியடிக்க வீட்டோ அதிகாரத்தை ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைபவர்களை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

ஆனால், அதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கான ஒப்புதலை எதிர்க்கட்சிகள் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

Susan Walsh/AP

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் வாக்களிக்கும் பட்சத்தில், அதை முறியடிக்கும் வகையில் முதல் முறையாக தனது வீட்டோ அதிகாரத்தை டிரம்ப் கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஸ்டீஃபன் மில்லர் கூறுகையில், ‘சுவர் எழுப்புவதற்காக பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை, ஜனாதிபதி டிரம்ப் தளர்த்த விடமாட்டார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...