எனக்கு அவர்களைப் பிடிக்காது.. சூடான காபியை முகத்தில் ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்த ஜான் கிரைன் என்ற நபர், ஓட்டல் ஒன்றில் காபி குடித்துவிட்டு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றுள்ளான்.

அப்போது பணியில் இருந்த சீக்கியர் ஒருவர், ஜானிடம் காபிக்கு பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கியுள்ளான். மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றியுள்ளான்.

இந்த தாக்குதலில் சீக்கியர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிசார் அங்கு வருவதற்குள் ஜான் கிரைன் தப்பி ஓடிவிட்டான்.

அவனிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனக்கு இஸ்லாமியர்களை பிடிக்காது என்றும் அவர் இஸ்லாமியர் என்று கருதியே தக்கியதாகவும் ஜான் கிரைன் தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த பொலிசார், திருட்டு-தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது ஜான் கிரைன் யூபா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...