இணையத்தில் வைரலாகும் ஒபாமா மகளின் புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னால் அதிபர் பராக் ஒபாமின் மகள் மாலியா ஒபாமா சமீபகாலமாக இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

Harvard பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாலியாவுக்கு தற்போது 20 வயதாகிறது. இவர் கடந்த ஆண்டு சிகரெட் குடித்த புகைப்படம் மற்றும் பொது இடத்தில் வைத்து தனது லண்டன் காதலனுக்கு முத்தமிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

அந்த புகைப்படத்தை தொடர்ந்து இவர் எங்கு சென்றாலும் இவர் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. தற்போது மியாமியில் தட்பவெட்பநிலை 80 டிகிரி உள்ளதால் தனது தோழிகளுடன் சேர்ந்து அருகில் உள்ள பைவ் ஸ்டார் உணவகம் மற்றும் ஏரிக்கு சென்றுள்ளார்.

அங்கு, Whispering Angel rosé என்ற வைன் அருந்தி தோழிகளுடன் பொழுதை கழித்துள்ளார். கருப்பு நிற பிகினி ஆடையில், வைன் பாட்டில்களுடன் இவர் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனது மகளின் சுதந்திரத்தில் எப்போதும் தலையிடமாட்டேன், அவளது விருப்பப்படி வாழ்க்கை அமையும் என ஒபாமா இதற்கு முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers