ஊனமான இரண்டு மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minnesota நகரை சேர்ந்தவர் ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். தற்போது இருவரின் வயதும் 20களில் உள்ளது.

இந்நிலையில் இருவரின் டீன் ஏஜ் பருவத்திலிருந்து அவர்களை ஜெர்ரி மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதில் ஒரு மகள் இரு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இருவரில் ஒரு பெண் கடந்த 2017 மே மாதம் வீட்டிலிருந்து தப்பி சென்று தனக்கும் தனது சகோதரிக்கும் நேர்ந்த கொடுமைகள் குறித்து பொலிசில் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஜெர்ரியை கைது செய்தனர். இதோடு ஜெர்ரியின் மனைவி வில்சனையும் கைது செய்தனர்.

காரணம், தன் மகள்களை காப்பாற்ற வாய்ப்பிருந்தும் அவர் உதவவில்லை என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இரும்பு சங்கிலியால் மகள்களை இறுக்க கட்டி போட்டு ஜெர்ரி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.

இதன் காரணமாக மகள்களின் கால்கள் அழுகியதும், அதன்பின்னர் ஊனமான மகள்களை தந்தை துஷ்பிரயோகம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஜெர்ரி மீதான வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் வரும் 20ஆம் திகதி தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers