மருமகள் பயன்படுத்தும் ஆணுறைகளை சேதப்படுத்திய மாமியார்! இக்கட்டான நிலையில் மருமகள்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மாமியாருடன் பேசிக்கொண்டிருக்கும்போது தங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை என்று கூறிய மருமகளின் ஆணுறைகளை ஓட்டையிட்ட மாமியாரால் இக்கட்டான சூழலுக்கு ஆளாகியிருக்கிறார் அந்த மருமகள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், சாதாரணமாக தன் கணவரின் தாயிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூற, அந்த மாமியார் மிகவும் கோபப்பட்டிருக்கிறார்.

பின்னர் அந்த மாமியார் பலத்த திட்டம் போட்டு தனது மகனின் வீட்டில் சமையலுக்கு உதவுவதாகக் கூறி நுழைந்திருக்கிறார்.

ஒரு நாள் தற்செயலாக தங்கள் படுக்கையறையில் மாமியார் இருப்பதைக் கண்ட மருமகள், அவர் என்ன செய்கிறார் என்பதை கவனித்தபோது அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார். அந்த மாமியார் தன் மகன் மருமகள் தூங்கும் அறையில் இருந்த மேசையில் இருந்த ஆணுறைகளை எடுத்து அவற்றைப் பிரிக்காமலேயே ஊசியின் உதவியால் அவற்றில் துளையிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் சந்தேகமுற்ற அந்த மருமகள், ஒருநாள், தான் கர்ப்பமுற்றிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சோதனை செய்து பார்க்க, தான் கர்ப்பமுற்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்றாலும், கருக்கலைப்பு செய்வதை தான் விரும்பவில்லை என்றும், பெற்றுக் கொள்ளவும் விருப்பமில்லாமல், கலைக்கவும் முடியாமல் தான் இக்கட்டான சூழலுக்க் ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.

தனக்கு ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலையை ஆலோசனைகள் வழங்கும் சமூக ஊடகம் ஒன்றில் அவர் பகிர்ந்து கொள்ள, ஏராளமானோர் தங்கள் ஆலோசனைகளை அவருக்கு அள்ளி வழங்கி வருகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல் ஒருவர், அந்த துவாரமிடப்பட்ட ஆணுறைகளை சாட்சியமாகக் கொண்டு பொலிசில் புகாரளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers