காதலியை அரைநிர்வாணமாக சூட்கேஸில் அடைத்து வைத்து ரோட்டில் வீசியது ஏன்? காதலன் சொன்ன காரணம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த பெண்ணைப் பற்ற தகவல் வெளியான நிலையில், அந்த பெண்ணை கொலை செய்ததது அவரின் காதலன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Greenwich சாலையில் இருக்கும் காட்டுப் பகுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் அரைநிர்வாண நிலையில் சூட்கேசின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்டு இறந்துகிடந்தார்.

இதனால் பொலிசார் அந்த பெண் யார் என்பது குறித்து மேற்கொண்ட விசாரணையில் அவர், New Rochelle பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரின் பெயர் Valerie Reyes(24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து எதற்காக இவர் இப்படி கொலை செய்யப்பட்டார் என்று பொலிசார் தங்களுடைய கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட போது, Valerie Reyes-ன் கிரெடிட் கார்டை da Silva என்ற நபர் பயன்படுத்தியது பொலிசாருக்கு தெரியவந்தது.

அதன் பின் அவனை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் குறித்த பெண்ணின் காதலன் எனவும் கடந்த மாதம் 29-ஆம் திகதி இரவு ஒன்றாக இருந்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவளுடைய வாயை டேப்பை வைத்து மூடினேன். அதன் பின் கை, கால்களை கட்டி சூட்கேஸ் ஒன்றில் வைத்து அமைதியாக இருக்கும் சாலை பகுதிக்கு கொண்டு சென்று வீசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொலிசார் da Silva வெனிசூலா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் விசா காலம் முடிந்தும் இங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...