டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்! பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் சத்தம் போட்டபடி வந்து பிபிசி ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸ் என்பவரை தாக்கினார்.

ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது தான் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் ஏற்பட்ட சலசலப்பை கண்டு பேச்சை நிறுத்திய டிரம்ப், ஊடகத்தினரை நோக்கி ஒன்றும் பிரச்சனை இல்லையே? எல்லாம் சரியாகத்தானே உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர் ஊடகங்கள் முற்றிலும் நேர்மையற்றவை என விமர்சிக்கத் தொடங்கினார். செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இந்த தாக்குதல் குறித்து பிபிசி நிறுவனத்திற்கான அமெரிக்க எடிட்டர் தனது ட்விட்டரில், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸூக்கு கோரிக்கை முன்வைத்தார். அதில், ‘செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஊடகத்தினர் பகுதிக்கு செல்லும் வழியானது கண்காணிப்பின்றி உள்ளது. தாக்குதல் நடந்த பிறகோ, அதற்கு முன்பாகவோ எந்த ஒரு சட்ட அதிகாரிகளும் அங்கு வரவில்லை’ என தெரிவித்தார். பிபிசி செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers