என்னுடைய ரகசிய ஆயுதம் இது தான்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

Report Print Kabilan in அமெரிக்கா

வாட்ஸ் அப் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க காரணமாக இருந்த ரகசிய ஆயுதம் தன்னுடைய நாய் தான் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்து வரும் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க். இவர் தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப்-ஐ, கடந்த 2014ஆம் ஆண்டு வாங்கி தனது நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வாட்ஸ் அப்-ஐ வாங்க அதன் நிறுவனருடனான ஒப்பந்தத்தின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘நானும், அப்போதைய வாட்ஸ்அப் உரிமையாளருமான ஜானும் ஒப்பந்தம் குறித்து என் வீட்டில் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஜான் முடிவெடுக்காமல் குழப்பத்தில் இருந்தார். யோசித்து முடிவெடுக்கலாம் என்பது போலவே அவர் இருந்தார்.

அப்போது என் நாய் பீஸ்ட் அறைக்குள் வந்தது. நானும், ஜானும் அமைதியாக அமர்ந்திருந்தோம். இவர்கள் ஏன் இப்படி அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்று யோசிப்பது போல் எங்களை பீஸ்ட் உற்று பார்த்தது. உடனடியாக துள்ளி குதித்து ஜானின் மடியில் ஏறி அமர்ந்தது.

பீஸ்ட்டை ஜான் கொஞ்ச தொடங்கினார். உடனடியாக இந்த ஒப்பந்தம் சரியாக வரும் என்று தோன்றுவதாக ஜான் கூறி ஒப்பந்தத்தை முடித்தார்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்த ஒப்பந்தத்தின் ரகசிய ஆயுதம் என் நாய் பீஸ்ட் தான் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தன் நாயுடன் தனது மகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மார்க், ‘என் மகள் பேசிய முதல் வார்த்தையே டாக் (Dog) என்பது தான்’ என்று குறிப்பிட்டிருந்தார். அன்று முதல் பீஸ்ட்டுக்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வட்டாரமே உருவானது.

தற்போது மார்க் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...