நீங்கள் போதுமான அளவு கருப்பாக இல்லை என்றவருக்கு இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸின் அதிரடி பதில்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கருப்பினத்தவரான ஒபாமா அதிபராக வந்தும், அமெரிக்கர்கள் கருப்பினத்தவர்களை கிண்டலடிப்பதை நிறுத்தியது போல் தெரியவில்லை.

இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸையும் கிண்டல் செய்து மீம்கள் வெளியாகும் நிலையில், ஒரு குறிப்பிட்ட மீம் அவரது பின்னணி குறித்து கிண்டல் செய்திருந்தது. கமலாவின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

இதை மனதில் வைத்தே, கமலா ஆப்பிரிக்க அமெரிக்கர் அல்ல என்று பொருள்படும் அந்த மீம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமலா, நான் ஆக்லாந்தில் பிறந்தேன், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது கனடாவில் வாழ்ந்தது தவிர்த்து மீதி காலமெல்லாம் அமெரிக்காவில்தான் வளர்ந்தேன் என்றார்.

இதைத்தான் அவர்கள் ஒபாமாவுக்கும் செய்தார்கள், ஆகவே இது எனக்கு புதிது அல்ல, எனவே அவர்கள் என்ன செய்ய முயல்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நீங்கள் போதுமான அளவுக்கு கருப்பினத்தவராக இல்லை என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், அவர்களுக்கு யார் கருப்பினத்தவர்கள் என்பது புரியவில்லை என்று நினைக்கிறேன், அதைப்பற்றி பாடம் எடுக்க எனக்கு நேரமில்லை, நான் கருப்பினத்தவள், கருப்பாக பிறந்தேன், கருப்பினத்தவராகவே இறப்பேன், புரியாதவர்களுக்கு நான் விளக்கப்போவதில்லை என்றார்.

கமலா ஹாரீஸின் பெற்றோர் இந்தோ அமெரிக்கர் மற்றும் ஜமைக்கன் அமெரிக்கர்கள். அதனால் தன்னை கருப்பினத்தவர் என்று அழைத்தாலும், ஆப்பிரிக்க அமெரிக்கர் என அழைப்பதை கமலா தவிர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers