இறந்தும் மகனுக்கு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து கொடுத்த தாய்! வெளியான பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் அம்மா இறந்த திகதியை வைத்து நம்பர் லாட்டரி வாங்கிய மகனுக்கு இரண்டு முறை லட்சக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது.

Maryland மாகாணத்தை சேர்ந்த 58 வயதான நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த தனது தாயின் இறந்த திகதியை வைத்து நம்பர் லாட்டரி வாங்கினார்.

இதில் அவருக்கு $10,146 பரிசு விழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அதே போல மீண்டும் தாயின் இறந்த திகதி சம்மந்தமான நம்பரில் லாட்டரி சீட்டு வாங்கினார்.

அதிலும் அவருக்கு $10,000 பரிசு விழுந்துள்ளது.

இதை தாயின் ஆசிர்வாதம் என்று கருதும் அந்த நபர், பரிசு பணத்தின் பாதியை தனது மகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மீதி பணத்தை வைத்து தனது வீட்டை சீரமைக்க உள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்