தன்னுடன் உறவு கொண்ட ஆசிரியையை பிளாக் மெயில் செய்த மாணவன்: சிக்கியது எப்படி?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு ஆசிரியை தன்னுடைய மாணவன் ஒருவனுடன் தவறான தொடர்பு வைத்துக் கொள்ள அதைப் பயன்படுத்தி அவரை பிளாக் மெயில் செய்துள்ளான் அந்த மாணவன்.

டெக்சாஸைச் சேர்ந்த ஜாஸ்மின் எட்வர்ட் (24) என்னும் ஆசிரியை தன்னிடம் பயிலும் மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

அதைப் பயன்படுத்தி அந்த மாணவன் ஜாஸ்மினை பிளாக் மெயில் செய்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான்.

ஒருமுறை 140 டொலர்கள் தனக்கு வேண்டும் என கேட்க, தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என மறுத்திருக்கிறார் ஜாஸ்மின்.

இருவருக்கும் இடையே அனுப்பப்பட்ட பாலியல் குறுஞ்செய்திகளுடன், அந்த மாணவன் ஜாஸ்மினை மிரட்டி அனுப்பிய குறுஞ்செய்தியும் கிடைத்துள்ளது.

அதில் அவன், எனக்கு நீ பதிலளிக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ தவறினால், எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது, மரியாதையாக எனக்கு 140 டொலர்கள் கொடுத்துவிடு, இல்லையென்றால், நமது ரகசியத்தை வெளியில் சொல்லிவிடுவேன், உன் வேலை போய்விடும், ஜாக்கிரதை என்று மிரட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

மிரட்டியபின்னரும் ஜாஸ்மின் பணம் கொடுக்காததால், சொன்னதுபோலவே விடயத்தை வெளியில் கொண்டு வந்து விட்டான் அந்த மாணவன்.

கைது செய்யப்பட்டுள்ள ஜாஸ்மின் மீது, அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers