அமெரிக்க வங்கியில் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல்: 5 பேர் பலி! ஆயுதங்களுடன் குவிந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வங்கியில் நடததப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ளோரிடா மாகாணத்தின் செப்ரிங் பகுதியில் செயல்பட்டு வரும் SunTrust வங்கியில் இன்று மதியம், திடீரென புகுந்த மர்ம நபர், மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்த பக்கத்துக்கு கடையை சேர்ந்த ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு ஆயுதங்களுடன் ஏராளமான பொலிஸார் குவிந்தனர். இதனை பார்த்த அந்த மர்ம நபர் பொலிஸாரிடம் சரணடைந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்களா? அல்லது வாடிக்கையாளர்களா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers