யாருக்கும் தெரியாமல் காதலியுடன் அறையில் தங்கிய இளைஞர்: நேரலையாக வெளியிட்ட தந்தை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த மாற்றான் தந்தை ஒருவர், வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு இளம்பெண்ணை அறைக்கு மகன் அழைத்து வந்திருப்பதை நேரலையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை நேரலையாக வெளியிட்டு வந்தார்.

இந்த பதிவானது 85 ஆயிரத்திற்கும் அதிகமாக பகிரப்பட்டதுடன், 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

அந்த பதிவில், 18 வயது மகன் வீட்டில் தாய்க்கு தெரியாமல் ஒரு இளம்பெண்ணை அறைக்கு அழைத்து சென்றிருக்கிறான்.

அந்த பெண் இரவு முழுவதும் அறையில் தான் தங்கியிருக்கிறாள். ஆனால் இந்த சம்பவம் குறித்து தாய்க்கு இன்னும் தெரியாது.

அவளுக்கு தெரியாமல் அந்த பெண்ணை எப்படி வெளியில் கொண்டுசெல்ல போகிறான் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை சுத்தம் செய்யும் வேளையில் ஈடுபட்டிருக்கும், இளைஞரின் தாய் இன்னும் கவனிக்காமல் இருக்கிறார்.

அந்த இளம்பெண்ணின் காலனி கூட வெளியில் கிடக்கிறது என குறிப்பிட்டு அதன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

எங்களுடைய வீட்டில் யாரும் வெள்ளை நிறத்திலான காலனி அணிவதில்லை. அவர்கள் இருவரும் மேல் மாடியில் இருக்கின்றனர். என்னுடைய மனைவி கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள் என தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும், தங்களுடைய பக்கத்தில் பகிர்ந்ததோடு இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் ஆவலாக காத்திருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர், பக்கவாட்டில் உள்ள ஒரு கதவின் மூலம் காதலியை பத்திரமாக வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக அவர் இறுதியில் கூறியிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers