24 மணிநேரத்தில் 15 லட்சம் டொலர்- அமெரிக்காவில் சாதித்த இந்திய பெண்

Report Print Abisha in அமெரிக்கா

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டொலர் நன்கொடையாக பெற்றுள்ளார்.

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தான் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதரவு பெருகியது.

தொடர்ந்து 12மணி நேரத்தில் 10லட்சம் டொலர்கள் நன்கொடையாக பெற்றுள்ளார். தொடர்ந்து 24நேரம் முடிவில் 15லட்சம் டொலர் அவருக்கு நன்கொடையாக வந்துள்ளது.

இதில் சுமார் 38ஆயிரம் பேர் கமலாவிற்கு நன்கொடை வழங்கி உள்ளனர். வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதிகம் நன்கொடை பெறுவது முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கமலா தனது பெயரை அச்சிட்டு டிசர்ட்ஸ் மற்றும் தொப்பி உள்ளிட்டவை விற்பனை செய்து ஒரு லட்சத்தி 10ஆயிரம் டொலர் பெற்றுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers