நான் கன்னித்தன்மையுடன் இருக்க காரணமான பெண்களை சுட்டு வீழ்த்த போகிறேன்! பேஸ்புக் பதிவிட்டவர் கைது

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின் உட்தாவை சேர்ந்த 27 வயதான கிறிஸ்டோபர் நான் கன்னிதன்மையுடன் இருக்க காரணமான பெண்களைபொது இடத்தில் கொலை செய்யபோகிறேன் என்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின்உட்தாவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 27 வயதான இவருக்கு இன்னும் பெண் தோழிகள் இல்லை என்றுகூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” எனக்கு 27 வயது ஆகின்றது.என்னை யாராவது காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் யாரும் என்னைதிரும்பி பார்க்கவில்லை.

நான் இன்றும் காதலி இல்லாமல் கன்னித்தன்மையுடன் உள்ளேன். பெண்கள்யாரும் என்னை ஏற்று கொள்ளவில்லை. எனவே பொது இடத்தில் நான் பெண்களை துப்பாக்கியால் சுட்டவீழ்த்தஉள்ளேன். இதனால் நான் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்று கூறிபிட்டுள்ளார்.

இதை பார்த்து அதிர்த்துபோன சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம்விசாரித்ததில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதில்வேறு சூழ்ச்சிகள் இருக்குமா என்று பொலிசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...