நேரடி ஒளிபரப்பில் பாலியல் தொல்லை: உதவி கேட்டு கதறிய இளம்பெண்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் ஒருவர் இரவு கேளிக்கை விடுதியில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக லைவ் ஸ்ரிமிங் செய்து உதவி கோரியது பெலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது ஒபேரா என்ற இரவு கேளிக்கை விடுதி.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு நடனம் நடக்கும் வேளையில் பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ்-ஸ்ரிம்(நேரடி ஒளிபரப்பு) செய்துள்ளார்.

இதனை அடுத்து அதில் அந்த பெண் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது போன்றும் அவர் உதவி கோருவது போன்றும் அதில் கத்தி கொண்டு இருந்துள்ளார்.

இதுபோன்று அவர் உதவி கோரிய மொத்தம் ஐந்து வீடியோக்கள் போஸ்ட் செய்துள்ளார்.

அதில் ஒருவர் பேபி என்ற அழைத்து அந்த பெண்ணை கூச்சலிடாமல் இருக்குமாறு கூறுவது போன்றும் உள்ளது.

மேலும் ஒரு வீடியோவில் அவர்கள் ஜோடியாக இணைந்து நடனமாடியும் உள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் மது அருந்திவிட்டு இதுபோன்று நடந்துள்ளார் என்றும். அவர் பெயர் பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை என்றும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டவர் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் அந்த பெண்ணுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த பெண் தான் நலமாக இருப்பதாகவும், அந்த நிகழ்வு குறித்து பேச விரும்பவில்லை என்றும், தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers