திடீரென வீட்டிற்குள் நுழைந்து லைவ் வீடியோவில் உடை களைந்த பெண்ணால் பரபரப்பு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் வீடு ஒன்றிற்குள் நுழைந்த அழகிய இளம்பெண் ஒருவர், அங்கிருந்த ஒரு ஆணின் மொபைல் போனைப் பிடுங்கி அதன் மூலம் சமூக ஊடகம் ஒன்றில் லைவ் வீடியோவில் உடைகளைக் களைந்ததைக் கண்டு அந்த நபர் அதிர்ந்துபோனார்.

அகிலா ஹாஸன் என்னும் அந்த பெண் வீடு ஒன்றிற்குள் நுழைந்து ஒவ்வொரு தளமாக சுற்றி வந்திருக்கிறார்.

ஒரு அறைக்குள் ஒரு ஆண் இருக்க, அவரிடமிருந்து மொபைல் போனைப் பறித்த அகிலா, அதில் பேஸ்புக் லைவ் வீடியோவில், சிலரை அந்த வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி, அழைத்திருக்கிறார்.

தொடர்ந்து லைவ் வீடியோவிலேயே அந்த ஆணுக்கு முன்பாகவே உடை களைந்த அகிலா, வெறும் உள்ளாடையுடனே லைவ் வீடியோவில் தொடர்ந்தவாறே வீடு முழுவதும் சுற்றியிருக்கிறார்.

பின்னர் அகிலா, வீட்டின் பின்னாலிருந்த தோட்டத்திற்குள் நுழைந்து அங்கும் வீடியோ எடுப்பதை தொடர்ந்திருக்கிறார்.

சுதாரித்துக் கொண்ட அந்த ஆண், அகிலா தோட்டத்திற்குள் சென்றதும் அவளை வெளியே விட்டு கதவை சாத்தி விட்டு பொலிசாரை அழைத்திருக்கிறார்.

விரைந்து வந்த பொலிசார் அத்து மீறி அகிலா வீட்டுக்குள் நுழைந்ததால், அவரை கைது செய்து, அவர் மீது திருட முயன்றதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அகிலா ஏன் அவ்வாறு நடந்து கொண்டார், அவர் போதையில் இருந்தாரா, என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்