செல்பி மோகம்: காதலியின் கண்முன்னே பரிதாபமாக பலியான காதலன்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் ஸ்னாப்சாட் புகைப்படத்திற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் போது, காதலன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் Pflugerville பகுதியில் தன்னுடைய காதலன் எரிக் சார்ல்ஸ் ஆலன் (26) உடன் வசித்து வந்தவர் 20 வயதான ஆட்டோமன் கிங்.

இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று, ஆலன் கையில் செல்பி எடுப்பதற்கு ஆயத்தமாக ஒரு செல்போனை பிடித்திருந்தார்.

அருகே கையில் ஒரு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஆட்டோமன், போஸ் கொடுப்பதற்காக ட்ரிகரில் கை வைத்துள்ளார்.

அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்த பாய்ந்த தோட்டா, காதலனின் நெஞ்சு பகுதியை பதம் பார்த்துள்ளது. உடனடியாக கை மற்றும் வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த ஆட்டோமன், கதறியபடியே உதவி கேட்டு தெருவிற்கு வந்துள்ளார்.

பின்னர் வேகமாக ஆம்புலன்சிற்கு போன் செய்து வரவழைத்தார். ஆனால் அவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையில், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு துப்பாக்கியை எடுத்து அவர்களுடைய குழந்தைகள் விளையாடிருந்தது தெரியவந்தது.

அவர்கள் துப்பாக்கியில் பூட்டப்பட்டிருந்ததை எடுத்துவிட்டதாலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்ததுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers