67 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: ஒரு பெண்ணுடன் மட்டும் ஏற்பட்ட காதல்.. சுவாரசிய பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த நபர் தனது விந்தணு மூலம் 67 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் அதை பயன்படுத்திய ஒரு பெண்ணுடன் தற்போது காதல் வசப்பட்டுள்ளார்.

ஆரோன் லாங் என்ற நபர் தனது விந்தணுவை தானம் செய்து வரும் நிலையில் இதுவரை தோராயமாக 67 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

அதில் ஒரு மகளின் பெயர் அலைஸ் (13). அலைஸின் தாய் ஜெசிகா பல வருடங்களுக்கு முன்னர் ஆரோனின் விந்தணுவை சுமந்து தாயானார்.

இந்நிலையில் DNA இணையதளம் ஒன்றின் மூலம் ஆரோனை தற்போது அலைஸும், ஜெசிகாவும் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஆரோனுடன் பேச தொடங்கியவுடனேயே தந்தை பாசத்தை அலைஸ் உணர்ந்துள்ளார்.

இதோடு அலைஸின் தாய் ஜெசிகாவும், ஆரோனும் காதலில் விழுந்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டிலிருந்து Seattle நகரில் உள்ள வீட்டில் மூவரும் வசித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆரோன் கூறுகையில், நான் சரியாக எத்தனை குழந்தைக்கு தந்தையாகியுள்ளேன் என்பது எனக்கு தெரியாது, ஆனால் தோராயமாக 67 பேருக்கு தந்தை நான்.

இத்தனை ஆண்டுகள் கழித்து ஜெசிகாவுடன் காதலில் விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers