தம்பதியை கொலை செய்து முகத்தை கடித்து சாப்பிட்ட இளைஞர்: அதிர்ச்சியடைந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தம்பதியினரை கொலை செய்து அவர்களுடைய முகத்தை கடித்து சாப்பிட்ட இளைஞரின் வழக்கு விசாரணைக்கான தேதியினை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான ஆஸ்டின் ஹாரோஃப் என்ற இளைஞர் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஸ்டூவர்ட் பகுதியை சேர்ந்த மிச்செல்லே மற்றும் ஜான் ஸ்டீவன்ஸ் என்ற தம்பதியினரை வீட்டிற்கு வெளியில் வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தான்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் ஆஸ்டினை கைது செய்ய முயன்ற போது இறந்து கிடந்த ஜான் முகத்தை கடித்து தின்று கொண்டிருந்தான்.

பின்னர் மின்சார துருப்பு துப்பாக்கியை பயன்படுத்தி ஆஸ்டினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது 22 வயதை அடைந்திருக்கும் ஆஸ்டின் பல்வேறு மருந்து கலவைகளை உட்கொண்டு தன்னை ஒரு வளர்ந்த மனிதன் போல கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடைபெறுதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ஆஸ்டின், வீட்டில் தந்தையுடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வெளியில் வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றவாளியின் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

கொலை குற்றம் மற்றும் ஜானின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபரை கடுமையாக தாக்கியதாக வழக்கு பதியப்பட்டது.

இதனை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மிச்செல்லேவின் சகோதரி கூறுகையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் தண்டனை கிடைக்க வேண்டும். அவன் மனிதனே கிடையாது மிருகம் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers