பரபரப்பான சாலையில் நெருப்பு கோளமான வாகனம்... 5 பேர் உடல்கருகி பலி: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கென்டக்கி மாகாணத்தின் லெஷிங்டன் நகரில் உள்ள நெடுஞ்சாலையில், கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

அப்போது அதே சாலையில் போக்குவரத்து விதிமுறை மீறி தவறான பாதையில் வந்த ஜீப் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். அதே போல் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவரும் பலியானதாக தகவல் வெளியானது.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்ஸாம் அப்பாஸ்(42), ரிமா அப்பாஸ்(38), அலி அப்பாஸ்(14), இசபெல்லா அப்பாஸ்(13), ஜிசெல்லி அப்பாஸ்(7) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers