அமெரிக்கர்களின் தூக்கம் தொடர்பாக வெளியான தகவல்

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

அமெரிக்காவில் வாழும் பலர் மிகவும் குறைவான நேரம் தூங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு வாழும் வயது வந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் இடம்பெறும் தேசிய சுகாதார ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் 400,000 வரையானவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 32.9 சதவீதமானவர்கள் தாங்கள் 6 மணி நேரத்திலும் குறைவாக தூங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று 2014 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த சதவீதம் 28.6 ஆக காணப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு தகவல்களையும் ஒப்பிடும்போது குறைந்தளவு நேரம் தூங்குபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகின்றமை புலனாகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்