சிங்கத்திடம் தனியாக சிக்கி போராடி உயிரை விட்ட இளம் பெண்: வெளியானது முதல் புகைப்படம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வனவிலங்கு காப்பகத்தில் இருந்து தப்பிய சிங்கத்திடம் சிக்கி பரிதாபமாக பலியான இளம் பெண்ணின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள புதிய பாலஸ்தீனம் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான அலெக்ஸாண்ட்ரா பிளாக்.

இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வட கரோலினா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பணியாளராக இணைந்துள்ளார்.

இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பிய சிங்கம் ஒன்று இளம் பெண் அலெக்ஸாண்ட்ரா பிளாக்கை கொடூரமாக தாக்கியுள்ளது.

இதில் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவப்பகுதிக்கு விரைந்த பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட சிங்கத்தை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

மிருகங்கள் தொடர்பில் பட்டப்படிப்பு முடித்துள்ள அலெக்ஸாண்ட்ரா பிளாக் ஒரு மிருக ஆர்வலர் எனவும், மிருகங்கள் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும் அவரது பெற்றோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சிங்கங்களை அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளை சுத்தம் செய்யும் நோக்கில் பாதுகாவலர்கள் அவைகளை வெளியே அழைத்து சென்றுள்ளனர்.

பயிற்சி பெற்ற நிபுணர்களே இதை செய்துள்ளனர். இருப்பினும் கண்ணிமைக்கும் நொடியில் தப்பிய சிங்கம் ஒன்று எதிரே வந்த அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வனவிலங்கு காப்பகத்தில் 21 இனங்களின் 80-கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது.

இங்கு 15 ஆப்பிரிக்க சிங்கங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 16,000 பேர் வருகை தந்து வனவிலங்குகளை கண்டுகளிக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்