அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடு: எதிர்பார்க்காத விலைக்கு ஏலம்?

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்கவின் கலிபோர்னியாவில் "ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்" என அழைக்கப்பட்ட வீடு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஏலத்திற்கு விலைபோகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்ரிஸ் நகரில், டேவிட் துர்பின் (56) - லூயிஸ் டர்பின் (50) தம்பதியினர் இரண்டு வயது முதல் 29 வயதிற்குட்பட்ட 13 குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தி வளர்த்து வந்துள்ளனர்.

ஜனவரி மாதம் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக தப்பிய 17 வயது சிறுமி, பொலிஸாருக்கு போன் செய்து நடந்தவை பற்றி விளக்கியுள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கு ஊட்ட சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்டிருந்த 13 சகோதர, சகோதரிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தைகளை கொடுமைப்படுத்திய தம்பதியினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் "கலிபோர்னியா ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்" என அழைக்கப்படும் குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்த வீடு ஏலத்திற்கு வந்துள்ளது.

2,386 சதுர அடியில் அமைந்துள்ள வீடு, நான்கு படுக்கையறைகள் மற்றும் மூன்று கழிவறைகள் கொண்டது. இதன் ஏலம் சனிக்கிழமை ஆரம்பித்து ஜனவரி 2 ம் தேதி முடிவடைகிறது.

தற்போது வரை £154,434 பவுண்டுகள் ஏலம் சென்றுள்ளது. இறுதிநாளை அடையும்போது ஏறக்குறைய £277,886 பவுண்டுகளுக்கு செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த வீடு கடந்த நவரம்பர் மாதமே ஏலத்திற்கு வந்தது. ஆனால் இதில் உள்ள சிறைச்சாலை மற்றும் சித்திரவதை தளம் குறித்து வாங்குபவர்கள் சந்தேகம் தெரிவித்ததால், விலைப்பட்டியலை ஏல நிறுவனமான ஹட்சன் & மார்ஷல் புதுப்பித்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்