உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? வெளியான புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், அவர் அங்கு தன் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளதால், தேமுதிக நிர்வாகிகள் அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அரசியல் கூட்டங்களில் பங்கேற்காமல் வருகிறார். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசும் குணம் கொண்ட விஜய்காந்திற்கு மக்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு.

பொதுக் கூட்டங்களிலும் எந்தவித கொண்டாட்டங்களிலும் விஜயகாந்த் அதிகமாகப் பங்குபெறுவதில்லை என்றாலும் எப்போதாவது அவரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும். மக்களும் அந்தப் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வைரலாக்கிவிடுவார்கள். எல்லாப் புகைப்படங்களிலும் விஜயகாந்த் சிரித்தபடியே உற்சாகமாக போஸ் கொடுத்திருப்பார்.

கடந்த சில மாதங்களாக விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரைப் பற்றி பல வதந்திகளும் வந்தன.

அதுக்கு ஏற்ற வகையில் அவரின் புகைப்படமும் எதுவும் வெளியாகமல் இருந்ததால், உண்மையில் தலைவருக்கு என்ன ஆனது என்பதை அறிய முடியாமல் பலரும் தவித்தனர்.

இது போன்ற நிலையில் தான், விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையை பற்றி பலரும் தெரியாமல் இருந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் தன் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திலும் விஜயகாந்த் வழக்கம் போல் தன்னுடைய புன்னகையை வெளிப்படுத்தியுள்ளார்.

வதந்திகள் பரப்பிய பலருக்கும் இந்த புகைப்படம் சரியான பதிலடியாக இருந்தது. இந்தப் புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இல்லை தலைவா’, 2019 திருப்புமுனை ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன், ‘தலைவா மீண்டும் கம்பீரமான நடையோடு, சிம்மக் குரலோடு வா என்று தேமுதிக நிர்வாகிகள் பலரும் அவருடைய புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் முதற்கட்ட சிகிச்சைக்காக சென்ற விஜயகாந்த் ஒரு மாத கால சிகிச்சைக்குப் பின்னர் தமிழகம் திரும்பினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளை மேற்கொண்டார்.

தற்போது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார். கட்சிப் பொறுப்புகளை விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers