மோசமான ஆடை அணிந்து வந்த மெலனியா டிரம்ப்: இணையதளவாசிகள் கடும் விமர்சனம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அணிந்து வந்த ஆடையானது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஈராக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தன்னுடைய கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று தன்னுடைய கணவருடன் வெளியில் சென்ற மெலனியா டிரம்ப் பச்சை நிறத்திலான மேல் சட்டையும், தங்க நிறத்திலான கால் சட்டையும் அணிந்து புறப்பட்டார்.

ஆனால் அவருடைய ஆடையை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு, கால் சட்டை இல்லாததை போல தோன்றியதால் இணையதளவாசிகள் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அதில் ஒருவர். மெலனியா பச்சைக் கோட் மற்றும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்துள்ளார். ஆனால் கால் சட்டை அணியவில்லை. ட்ரம்பின் மிகசிறந்த குடும்பம் என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், கால் சட்டை மற்றும் காலனி இல்லாமல் இரவு நேரத்தில் மெலனியா ஏன் கூலிங் கிளாஸ் அணிந்து செல்கிறார். யாரேனும் எனக்கு விளக்க முடியுமா என பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers