அமெரிக்காவில் வானில் திடீரென தோன்றிய நீல ஒளி: ஏலியன்கள் தாக்குதலா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் திடீரென வானில் பிரமாண்டமாய் ஒரு நீல நிற ஒளி தோன்ற, மக்கள் ஏலியன்கள் தாக்குதலோ என்று எண்ணியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சமுற்ற மக்கள் தெருக்களில் கூடியதோடு அந்த காட்சியை புகைப்படமும் வீடியோக்களும் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.

La Guardia விமான நிலையம் உட்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பரபரப்பாக பயணிகள் பயணிக்கும் நேரத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

Rikers தீவிலுள்ள சிறைச்சாலையில் மின் தடை ஏற்பட்டதால் பொலிசார் விரைந்து ஜெனரேட்டர்களை இயக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

பின்னர்தான் தெரிவ வந்தது, Con Edison மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றுதான் வானில் ஏற்பட்ட நீல நிற ஒளிக்கும் மின் தடைக்கும் காரணம் என்பது.

அந்த வெடி விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதற்கிடையில் சமூக ஊடகங்களில் எடிட் செய்யப்பட்ட படங்களை வெளியிட்டு, ஏலியன்கள் தாக்குதல் நடத்துவதாக ஒரு கூட்டம் புரளியைக் கிளப்பியது.

பின்னர் வானில் தோன்றிய நீல நிற ஒளிக்கு காரணம் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்துதான் என்று தெரிவித்த பொலிசார், ஏலியன்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று வேடிக்கையாக தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers