தோட்டத்தில் நெளிந்து கொண்டிருந்த 36 விரியன் பாம்புகள்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தனது தோட்டத்தில் அமைந்திருந்த ஷெட் ஒன்றின் கீழ் சுமார் 36 விரியன் பாம்புகள் நெளிந்து கொண்டு கிடந்ததைக் கண்ட தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சிக்குள்ளானார்.

தோட்டத்தில் வேலை செய்வதற்காக சென்ற அந்த தோட்டத்தின் உரிமையாளரான Bobby Cowanம் அவரது நண்பர்களும் அங்கிருந்த ஷெட் ஒன்றின் கீழ் சிறிய கட்டு விரியன் ஒன்று செல்வதைக் கண்டனர்.

இயந்திரம் ஒன்றின் உதவியால் அந்த ஷெட்டைத் தூக்கியவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Ssssssurprise!! Horrifying moment Texas man discovers THREE DOZEN rattlesnakes under his shed

அங்கு குறைந்தது 36 கட்டு விரியன் பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. டஜன் கணக்கில் விஷப்பாம்புகள் தங்கள் தோட்டத்தில் இருப்பதைக் கண்ட Bobby Cowan, அங்கு தங்கள் கால்நடைகளும் இருந்ததால் உஷாரானார்.

மெதுவாக அந்த பாம்புகளை ஒவ்வொன்றாக பிடித்து தங்கள் தோட்டத்திலிருந்து வெகு தொலைவில் கொண்டு போய் விட்டு வந்தனர் Bobby Cowanம் அவரது நண்பர்களும்.

அந்த ஷெட்டை தூக்கி அதன் கீழிருந்த பாம்புகளை வீடியோவாக பதிவு செய்த Bobby Cowanஇன் நண்பர்கள் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்ற, அது வைரலானது.

தாங்கள் எண்ணிய வரையில் 36 என்று எண்ணியதாகவும் ஆனால், அங்கு சுமார் 50 பாம்புகள் வரை இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர் Bobby Cowanஇன் நண்பர்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers