மனைவியுடன் ஜாலியாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட இந்தியர்: அடுத்த சில மணி நேரத்தில் நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொலிஸ் அதிகாரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.

கலிபோரினியாவில் வசித்து வந்தவர் ரோனில் சிங். இந்தியாவை சேர்ந்த இவருக்கு அனாமிகா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நியூமானில் பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து வந்த ரோனில் சிங் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர் அன்றிரவு ஓவர் டைமாக வேலை செய்தார்.

சாலை போக்குவரத்தை ரோனில் கவனித்து வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ரோனில் சிங்கை சுட்டுவிட்டு தப்பினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ரோனில் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனிடையில் குற்றவாளியை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்துவிடுவோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers