அமெரிக்காவில் சிறுமியிடம் ஜனாதிபதி டிரம்ப் கேட்ட கேள்வியால் பரபரப்பு!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி டிரம்ப் சிறுமியிடம் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த கோல்மன் லாயிட் என்ற சிறுமி டிரம்பிடம் பேசினார். அப்போது சிறுமிக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறிய டிரம்ப், அவரை நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் ‘சாண்டா கிளாஸை(கிறிஸ்துமஸ் தாத்தா) நீ நம்புகிறாயா?’ என டிரம்ப் கேள்வியெழுப்பினார். அதற்கு அச்சிறுமி ‘ஆமாம் சார்’ என பதிலளித்தார். ஆனால் டிரம்பிடம் இருந்து இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ‘சரி, மகிழ்ச்சியாக இருங்கள்’ என டிரம்ப் சிறுமியிடம் கூறினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும் சாண்டா கிளாஸ் குறித்து இவ்வாறு டிரம்ப் எழுப்பிய கேள்வி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிரம்ப் தங்கள் மகளிடம் பேசியதில் கோல்மன் லாயிட்டின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், டிரம்ப் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே தனக்கு அர்த்தம் தெரியவில்லை என அச்சிறுமி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers