சூதாட்டத்தில் 1 மில்லியன் டொலர் வென்ற 85 வயது முதியவர்! அதை என்ன செய்யப் போகிறார்?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த 85 வயது முதியவருக்கு ஒரே வாரத்தில் இரண்டு அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்துள்ளதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

அமெரிக்காவின் , New Jersey மாகாணத்தின் Atlantic சிட்டி பகுதியில் இருக்கும் Borgata Hotel Casino-வில் Harold McDowell என்ற 85 வயது முதியவர் கடந்த சனிக்கிழமை போகர் எனப்படும் poker என்ப்படும் சூதாட்ட விளையாட்டை விளையாடியுள்ளார்.

இதற்காக அவர் முதலில் வெறும் 5 டொலர் மட்டுமே பெட்டாக கட்டியுள்ளார். அதன் பின் அதிர்ஷ்டம் அவர் பக்கம் வீச இறுதியாக அவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 18,15,60,000 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.

இது குறித்து அவர் உள்ளூர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த வாரம் எனக்கு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன். ஒன்று என் மனைவி புற்றுநோயிலிருந்து முற்றிலும் விடுபட்டாள், மற்றொன்று poker எனக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்துள்ளது.

அவரது மனைவி கல்லீரல் புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் அதற்கான உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் புற்றுநோயிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளார்.

பெட்டில் வென்ற் பணத்தை அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். எங்களுடைய காலம் முடிந்துவிட்டது, அவர்களது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்பதற்காக இந்த முடிவு என தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்டில் வென்ற தொகையில் அவர் 200,000 டொலர் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...