குழந்தை போல நடைபழகும் விண்வெளி வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் குழந்தை போல நடைபழகும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாசா விண்வெளி வீரர் AJ Drew Feustel, 197 நாட்களுக்கு பின்னர் கடந்த மே மாதம் விண்வெளியில் இருந்து தனது குழுவினருடன் பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு வழக்கமாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்.

அதன்படி Feustel-க்கும் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர், தனது முன்னாள் குடியிருப்பு இல்லமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கி Feustel நடைபயிற்சி மேற்கொண்டார்.

அவருக்கு ஆராய்ச்சியாளர்கள் சிலர் உதவுகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட இவர் நடைபழகும் வீடியோ காட்சியை, Feustel-யின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்கள் நலமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் சிரமங்கள் தற்போது புரிவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...