கிறிஸ்துமஸ் மரத்திற்கு குவியல் குவியலாக விஷப்பாம்புகள்! தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி

Report Print Kavitha in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றிற்குள் இருந்து குவியல் குவியாக விஷப்பாம்புகள் வெளிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த கிறிஸ்துமஸ் மரம் திடீரென தீ பிடித்து எறிய ஆரம்பித்துள்ளது. இதனை கண்டு உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குள் புகுந்து தீயை அணைத்த போது, உள்ளே குவியல் குவியலாக பாம்புகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் ஒவ்வொன்றாக அப்புறப்படுத்திய போது தான் அங்கு 100க்கும் மேற்பட்ட பல கொடிய விஷம் கொண்ட பாம்புகளும், 5 முதல் 6 அடி நீளம் கொண்ட பல மலைப்பாம்புகளும் இருப்பது தெரியவந்தது.

மேலும் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக அத்தனை நாட்களாக பதுங்கி இருந்த பாம்புகள், ஒட்டுமொத்தமாக வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers