கருப்பாக இருக்கும் நீ செத்து விடு... 9 வயது சிறுமி மீது இனவெறி தாக்குதல்! அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பின பள்ளி மாணவி மீது சக மாணவ, மாணவிகள் இனவெறி தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Alabama மாகாணத்தை சேர்ந்தவர் மெக்கன்சி ஆடம்ஸ் (9). இவர் ஜோன்ஸ் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

மெக்கன்சி கருப்பின சிறுமியாவார். இதையடுத்து அவர் மீது பள்ளியில் உள்ள சக மாணவ, மாணவிகள் நிறம் மற்றும் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை நிற சிறுவன் பள்ளியில் மெக்கன்சிக்கு நெருங்கிய தோழனாகியுள்ளான். இதை வைத்து மெக்கன்சியை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

அதாவது, நீ வெள்ளை நிறத்திலான மாணவனுடன் நட்பு கொண்டால் நீயும் வெள்ளையாகி விடுவாயா? நீ அசிங்கமானவள், செத்துவிடு என்றெல்லாம் தொடர்ந்து மெக்கன்சியை சக மாணவ, மாணவிகள் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த மெக்கன்சி சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பேசிய மெக்கன்சியின் உறவினர் எட்வினா, ஒரு ஆண்டு முழுவதும் சக மாணவ, மாணவிகளால் அவள் கிண்டல் செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மெக்கன்சிக்கு பரிசளிக்க யோசித்து கொண்டிருந்தோம், தற்போது அவள் இறுதிச்சடங்கு குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மெக்கன்சியின் பள்ளி நிர்வாகம் சார்பில் பேசிய நபர், பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள், நாங்கள் அதற்கு முழு ஒத்தழைப்பு கொடுத்து வருக்கிறோம், இதற்கு மேல் தற்போது எதுவும் பேச முடியாது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers