மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் இவர்தான்: சுவாரஸ்ய செய்தியின் பின்னாலுள்ள அரசியல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

1982ஆம் ஆண்டு, அமெரிக்க கப்பற்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், சமுத்திரவியலாளருமான Robert Ballardக்கு, மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அதற்காக தண்ணீருக்கடியில் பயணிக்கும், தன்னுடைய சொந்த ரிமோட் கண்ட்ரோலால் இயங்கும் வாகனம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லை.

அதனால் தன்னுடைய இலக்கை அடைவதற்கு கடற்படையின் உதவியை நாடினார் அவர். கடற்படையும் அவருடைய கோரிக்கைக்கு இணங்கியது, ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்... 1960களில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மூழ்கி காணாமல் போயின.


அந்த கப்பல்களைக் கண்டுபிடித்துத் தருவதானால், அவருக்கு டைட்டானிக்கைக் கண்டுபிடிப்பதற்கு நிதியுதவி செய்வதாக அமெரிக்க கடற்படை உறுதியளித்தது. இப்போது ஒரு சிக்கல், காணாமற்போன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடுவதாக தகவல் வெளியானால், போட்டி நாடான ரஷ்யா உஷாராகிவிடும்.

எனவே அதை மறைப்பதற்காக Ballard டைட்டானிக்கைத் தேடுவதாக தகவல் வெளியிடப்பட்டது.

தேடுதல் வேட்டையில் இறங்கிய Ballardஇன் குழுவினர், 1985ஆம் ஆண்டு USS Thresher மற்றும் USS Scorpion என்று அழைக்கப்படும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டுபிடித்தனர்.

1963ஆம் ஆண்டு Thresher பாஸ்டன் கரையிலிருந்து 200 மைல்கள் தொலைவில் மூழ்கிக் காணாமல் போனது, அதிலிருந்த 129 பேரும் உயிரிழந்தார்கள்.

1969ஆம் ஆண்டு, 99 பேருடன் Scorpion என்னும் நீர்மூழ்கிக் கப்பல் மர்மமான முறையில் Azores பகுதிக்கருகில் காணாமல் போனது.

அவை இரண்டையும் Ballard கண்டுபிடித்துவிட்டாலும், அவரது குழுவினரால் டைட்டானிக்கை உடனடியாக கண்டுபிடிக்க இயலவில்லை.

அவருக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே மிச்சமிருந்த நிலையில், Ballardஇன் குழுவினர் தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தினர்.

Scorpion நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்த அனுபவம் டைட்டானிக்கை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதற்கு Ballardக்கு ஒரு நல்ல யோசனையைக் கொடுத்தது, அது கப்பலின் சிதறிய பாகங்களைப் பின்தொடர்வது.

இரண்டு மாதங்களாக தேடியவர்களுக்கெல்லாம் கிடைக்காத டைட்டானிக், எட்டு நாட்களுக்குப்பின் Ballard கண்களில் பட்டது.

அப்போதுதான் Ballard தனது ரிமோட் கண்ட்ரோல் கெமராக்கள் மூலம் தண்ணீருக்கடியில் கிடந்த டைட்டானிக் கப்பலின் சிதறிய பாகங்களை படம் பிடித்தார்.

இவ்வளவு நாட்களும் டைட்டானிக்கைக் கண்டுபிடிக்க வேண்டும் என குஷியாக இருந்த Ballardஇன் குழுவினரின் மன நிலை, டைட்டானிக்கைக் கண்டதும் சட்டென மாறியது.

நாங்கள் பலரது சவக்குழிகளின் மீது நடனமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்பட்டமாக உணர்ந்தோம் என்று கூறும் Ballard, நாங்கள் அசௌகரியமாக உணரத் தொடங்கினோம் என்கிறார்.

மிகவும் துக்கம், அமைதி, மரியாதை ஆகிய உணர்வுகள் மேலோங்க, அந்தக் கப்பலிலிருந்து எதையும் எடுத்துச் செல்வதில்லை என நாங்கள் சத்தியம் செய்து கொண்டோம் என்னும் Ballard, அந்தக் கப்பலை நாங்கள் மிகவும் மரியாதையுடன் நடத்த முடிவு செய்தோம் என்கிறார்.

Southamptonஇலிருந்து நியூயார்க் புறப்பட்ட, மூழ்கவே மூழ்காது என கருதப்பட்ட டைட்டானிக் கப்பலில், 2,400பேர் பயணித்ததாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 1,500 பேருக்கும் மேலானோர் இறந்துபோனார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்