பயணிகள் விமானத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் பயணித்தேன்.. அப்போது? உருக்கமாக கூறிய தாய்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில், அவருக்கு முதல்தர வகுப்பை பயணி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் Kelsey Rae Zwick. இவர் கடந்த வியாழக்கிழமை Orlando-விலிருந்து Philadelphia-வுக்கு தன்னுடைய உடல்நிலை சரியில்லாதக் குழந்தையுடன் American Airlines விமானத்தில் சென்றுள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு முன் குழந்தை அழுதுள்ளது. அப்போது விமானத்தின் முதல் வகுப்பில் இருந்த பயணி ஒருவர் தன்னுடைய இடத்தை மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

அதன் பின்பு தான் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவந்தது. நுரையீரல் பிரச்சனையால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைக்காக அந்த இடத்தை பயணி மாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து Kelsey Rae Zwick மற்றும் அவரது குழந்தை Lucy முதல் வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதல் வகுப்பிற்கு மாற்றப்பட்ட பின்பு குழந்தை லூசி அழுகாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆக்சிஸன் , துணிகள் போன்ற வசதிகள் இருந்துள்ளன. இதனால் குழந்தையும் சந்தோஷமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், யார் அந்த நபர் என்று தெரியவில்லை, என்னால் உணர்ச்சியை அடக்க முடியவில்லை, உண்மையில் நன்றியை கூறிக் கொள்கிறேன். விமானத்தில் இருந்த விமான ஊழியர்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர்.

இதை நினைத்தால் கண்னீர் வருகிறது. உலகில் இப்படி பட்ட மக்களும் இருக்கின்றனர். தயவு செய்து இதை பரப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers