உலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்! எத்தனை கோடி தெரியுமா?

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், உலகிலேயே யூ டியூப் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நபர் என பிரபல போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் (7). இச்சிறுவனுக்கு 4 வயதாக இருக்கும்போது கடந்த 2015ஆம் ஆண்டு Ryan ToysReview என்ற யூ டியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்களுக்கு ரேயான் Review வழங்கி வருகிறான். இவனது Review பலரையும் கவர்ந்ததால், விளையாட்டு பொருட்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் அடித்து வருகின்றன.

இதன்மூலம், இந்த யூ டியூப் சேனல் 17 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அத்துடன் 26 பில்லியன் Views-ஐயும் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல போர்ப்ஸ் பத்திரிகை 2018ஆம் ஆண்டில் யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதித்த நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ரேயான் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளான். கடந்த 12 மாதங்களில் இந்த யூ டியூப் சேனல் மூலமாக, ரியான் சுமார் 22 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் ரூ.154 கோடி) சம்பாதித்துள்ளான்.

இவன் ஒரு பொருளுக்கு நல்ல Review கொடுத்துவிட்டால், அது சந்தையில் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதாக போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சிறுவனுக்கு வால்மார்ட் ஒரு ஆச்சரியத்தை அளித்தது. அதாவது, தங்களது ஷோ ரூமில் Ryan World என்ற பெயரில் தனி பிரிவையே இவனுக்காக உருவாக்கியது.

இதனால் சிறுவர்கள் இங்கு வந்து அதிகளவில் பொருட்கள் வாங்குவதால், தங்களது வருமானம் 8 சதவிதம் அதிகரித்துள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது.

ரேயான் ஈட்டும் வருமானத்தை மொத்தமாக எடுக்க முடியாது. இவன் ஈட்டும் வருமானத்தில் 15 சதவிதம் அவனது வங்கி கணக்கிற்கு செல்லும். அதை அவன் வளர்ந்த பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள பணத்தை இப்போதே அவன் செலவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers