அலாஸ்காவைக் குலுக்கிய நில நடுக்கம், மேசைகளின் கீழ் பதுங்கிய மக்கள்: அவசர நிலை பிரகடனம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நேற்று காலை 8.29 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், புகழ்பெற்ற அலாஸ்கா மாகாணத்தின் Anchorage நகர் குலுங்கியதில் சாலைகள் பிளந்தன.

அலாஸ்காவின் Cook Inlet மற்றும் தென் கெனாய் தீபகற்ப பகுதி உட்பட பல கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

பூமிக்கு அடியில் சுமார் 21 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் Anchorage நகரில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

நிலநடுக்கத்தால் வீட்டின் கண்ணாடிகள், கனமான பொருட்கள் கீழே விழுந்தன. இதையடுத்து மக்கள் மேசைகளின் கீழ் பதுங்கினர்.

இதுவரை யாருக்கும் காயங்களோ, உயிர்ச் சேதமோ ஏற்பட்டதாக தகவலில்லை. இந்நிலையில், G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மக்களுக்கு ட்விட்டரில் வெளியிட்ட செய்தி மூலம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers